சனி, ஏப்ரல் 15, 2006

'வழி' - 1

1 பரப்பிரும்மம்

சொல்லால் விளங்குவதல்ல எங்குமிருக்கும் பரப்பிரம்மம்
சொல்லால் பெயரிடப்பட்டதல்ல என்றுமிருக்கும் பரப்பிரம்மம்

பெயரில்லாததே இவ்வுலகிற்கும் சொர்க்கத்திற்கும் காரணம்
பெயரிடப்பட்டது இவ்வுலகப் பொருட்களுக்குக் காரணம்

பற்றில்லாதவர் பிரபஞ்சத்தின் இரகசியம் அறியலாம்
பற்றுள்ளவர் மாயையின் விளையாட்டைக் காணலாம்

விளைவு இரண்டானாலும் மூலம் ஒன்றே
விளக்கம் அறிய, வேண்டியது வெளிச்சம்.

மதியால் ஊகிக்க முடியாத புதிர்
புதிருக்குள் புதிர் – ரகசியங்களின் கதவு!


'வரைபடம் நிலப்பரப்பல்ல' என்றார் ஒரு அறிஞர். [Alford Korzybski: “Map is not the territory”]. அதே போலத்தான் லாவோ -ட்ஸே இங்கே பரப்பிரும்மத்தை - 'தாவோ'வை வர்ணிக்கிறார். இந்து தத்துவத்தில் (சங்க்யா), 'புருஷா' என்பது 'அறிவது' என்பதையும், 'பிரக்ருதி' என்பது புலன்கள் உணர்த்தும் பொருள்கள் என்பதையும் குறிக்கும் என்பார்கள். (விபரங்களுக்கு இங்கே). இரண்டுக்கும் மூலமாக 'ஈஸ்வரா' என்கிற 'ப்ராமண்' என்றும் சங்க்யா முறையில் விவரிக்கிறார்கள். இந்த மூலம் பற்றிய புதிரைத்தான் லாவோ -ட்ஸே இங்கு குறிப்பிடுகிறார்.

2 Comments:

At 5:36 PM, Blogger குமரன் (Kumaran) said...

என்ன ரங்காண்ணா நம்ம ஊர் தத்துவங்களைப் படிக்கிற மாதிரி இருக்கு இந்த வழி? :-)

 
At 9:20 AM, Blogger ரங்கா - Ranga said...

குமரன்,

உண்மைதான். இந்தப் பதிவின் முகப்பு பக்கத்தில் லாவோட்ஸே சம்பந்தப்பட்ட சில இணையங்களின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக சில ஆங்கில மொழிபெயர்ப்புகளின் பக்கங்கள், 81 அத்தியாயங்களையும் படித்த பிறகு, பெரும்பான்மையான தத்துவங்கள் இந்து தத்துவங்களை ஒத்தே இருக்கிறது என்பது தெரியவரும்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home