சனி, பிப்ரவரி 24, 2007

'வழி' – 46

46. 'வழி' தழுவிய கழி

'வழி'யைத் தழுவியே வாழும் நாட்டினிலே
கழிகள் வயலுக்கு ஏர்களாய் உதவுமே

'வழி'யை மறந்தே மக்களும் வாழ்கையில்
கழிகளும் நாட்டிலே ஈட்டிகளாய் மாறுமே

பேராசையை மீறிய பாவமும் இல்லையே
சேராதே துன்பமும் போதுமென்ற மனத்திலே


*********

மிகச் சுருக்கமாக அதே சமயத்தில் ஒரு ஆழமான கருத்து. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் 'வழி'யைத் தழுவி வாழ்கையில் எப்படி ஒரு சிறிய பொருள் கூட வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் 'வழி' மறந்து போனால் எப்படி அதே பொருள் அழிவுக்குத் துணை போகும் என்பதையும் அழகாக விளக்குகிறார்.

புத்தரின் போதனையான 'ஆசையே அழிவுக்குக் காரணம்' என்பது 'வழி'யின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று. அதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

2 Comments:

At 9:12 PM, Blogger குமரன் (Kumaran) said...

மிக எளிதாகவும் அதே நேரத்தில் மிக ஆழமாகவும் இருக்கிறது ரங்கா அண்ணா.

இந்தக் கவிதை வடிவில் நீங்கள் தான் எழுதுகிறீர்களா? நன்றாக இருக்கிறது.

 
At 8:53 AM, Blogger ரங்கா - Ranga said...

நன்றி குமரன்.

மூலம் லாவோட்ஸே தான்; மொழிபெயர்ப்பு என்னுடையதே. அதுவும் நேரடியான மொழிபெயர்ப்பு அல்ல; பத்து, பதினைந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து பின் தமிழில் நான் எழுதியது.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home