திங்கள், ஏப்ரல் 02, 2007

'வழி' - 51

51. 'வழி'யின் காப்பு

மண்ணில்வரும் பொருளெல்லாம் பிறந்ததும் வழியினாலே
பண்புதரும் சக்தியினால் இயல்பொற்றி வளர்ந்திடுமே

நியமத்தால் புவியுமதன் உருவேற்றித் தந்திடுமே
சுயவினையின் செயல்பாடு பொருளின் வழியமைத்திடுமே

பண்பும் பொருளும் உயிரும் புவியுமிங்கே
எண்ணுவதும் இயங்குவதும் வளர்வதும் வழியினாலே

தந்தாலும் வழியுமே பொருளையும் உயிரையும்
சொந்தமே ஆக்காதே எந்நாளும் எதையுமே

உருவாக்கியே தந்தாலும் தனதாக்கா எண்ணமுடன்
தருவதனின் நிழல்போல ஆசானும் அளிப்பானே

*********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் இப்பிரபஞ்சமனைத்திலும் உள்ள பொருளனைத்தும் வழியிலிருந்து தோன்றியதே என்பதை எடுத்துரைக்கிறார். கீதையிலும் இதே போன்ற தத்துவம் உள்ளது "நீ எதை எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; நீ எதைக் கொடுத்தாயோ அதுவும் இங்கேயே கொடுக்கப்பட்டது" என்ற கீதாசார வாக்கியம் நினைவுக்கு வரும்.

இந்த மகத்துவத்தை உணர்ந்த ஆசானும், எதையுமே 'தனது' என்று எண்ணாமல், பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் அளிக்கிறான் - அனைவருக்கும் உதவும் மர நிழல் போல.

2 Comments:

At 4:40 AM, Blogger ஆசை said...

அன்புள்ள நண்பருக்கு,

என் பெயர் ஆசை. நான் க்ரியா என்னும் பதிப்பகத்தில் பணிபுரிகிறேன். நான் தற்செயலாக தங்களுடைய blogஜ பார்க்க நேர்ந்தது. எங்கள் பதிப்பகம் தாவோ தே ஜிங் புத்தகத்தின் தரமான மொழிபெயர்ப்பு ஒன்றைத் தமிழில் வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் www.crea.in காணலாம்.

வாழ்த்துக்களுடன்

ஆசை

At 4:40 AM, Anonymous Asai said...

அன்புள்ள நண்பருக்கு,

என் பெயர் ஆசை. நான் க்ரியா என்னும் பதிப்பகத்தில் பணிபுரிகிறேன். நான் தற்செயலாக தங்களுடைய blogஜ பார்க்க நேர்ந்தது. எங்கள் பதிப்பகம் தாவோ தே ஜிங் புத்தகத்தின் தரமான மொழிபெயர்ப்பு ஒன்றைத் தமிழில் வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் www.crea.in காணலாம்.

வாழ்த்துக்களுடன்

ஆசை

கருத்துரையிடுக

<< Home